News November 25, 2024
திருச்செந்தூரில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய துணை கண்காணிப்பாளராக மகேஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 12, 2025
தூத்துக்குடி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தூத்துக்குடி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0461-2271143) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
News December 12, 2025
தூத்துக்குடியில் ஊராட்சி பணி நேர்காணல் ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கான எழுத்து தேர்வு முடிவடைந்த நிலையில் அவர்களை பணி நியமனம் செய்வதற்கான நேர்காணல் இன்று (டிச.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த நேர்காணல் 2வது முறையாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
News December 12, 2025
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே பருவநிலை மாற்ற காலங்களில் வீடுகள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


