News November 8, 2024

திருச்செந்தூரில் கந்த சஷ்டி வழக்கு ஒத்திவைப்பு

image

கந்த சஷ்டி திருவிழாவின் போது, ​​திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவிலில், நபர் ஒருவருக்கு சிறப்பு நுழைவு கட்டணமாக விஸ்வரூப தரிசனத்திற்காக ரூ.3000 வரை வசூலிக்க தடை கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

Similar News

News November 20, 2024

சாலை விபத்துகளில் 137 பேர் உயிரிழப்பு

image

மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில் 137 பேர் மரணமடைந்துள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

முப்படை ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்று SPARSH மூலம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர், அவர்தம் விதவைகளுக்காக SPARSH OUTREACH நிகழ்ச்சியில் SPARSH ன் ராணுவ ஓய்வூதிய குறைபாடுகள் களைய பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்கள் மூலம் ராணுவ ஓய்வுதிய குறைதீர் கூட்டம் மதுரை மடீசியா ஹாலில் வரும் 22 ஆம் தேதி 9 மணியளவில் நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.

News November 19, 2024

குழு அமைத்து விசாரணை நடத்த பரிந்துரை – ஆட்சியர்

image

மதுரை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் தங்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து காட்டு நாயக்கர் பிரிவினருக்கு ST சான்றிதழ் வழங்குவது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த அரசுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.