News April 10, 2025
திருச்செங்கோடு அருகே விபத்து!

திருச்செங்கோடு மலையடிவார பாதை வேலுசாமி மண்டபம் அருகே நேற்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் ஆட்சியர் ஆய்வு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், இன்று ஆய்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டு வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் குறித்து விரிவாக பேசினர்.
News December 10, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அவர்கள் தலைமையில், இன்று (டிச.10) கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட தொடக்க விழா குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட இருக்கிறது.


