News September 14, 2024
திருச்சுழியில் 11 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
விருதுநகரில் சோகம்… சுவர் இடிந்து விழுந்து கல்லுாரி மாணவி பலி

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி 17. சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார். தொடர் மழை பெய்து வருவதாலும் வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ளதாலும் சுவர் பலவீனமடைந்துள்ளது. இருநாட்களுக்கு முன் காலை 10:00 மணிக்கு பவானி வீட்டில் இருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
News October 21, 2025
சிவகாசி: சுவர் இடிந்து நர்சிங் மாணவி உயிரிழப்பு

சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரத்தை சேர்ந்த வீரமணி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீரமணியின் 17 வயது மகளான நர்சிங் மாணவி பவானி பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்ற பவானி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News October 21, 2025
விருதுநகர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <