News March 25, 2025
திருச்சி:3,75,000மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முதலியார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் 4 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,75,000 மதிப்புள்ள 12,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
அதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இதில், மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருச்சி: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

திருச்சி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிற்க வேண்டாம். வீட்டில் இருந்தே மாற்றும் வழியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த <
News December 6, 2025
திருச்சி: அரசு பஸ் – கார் மீது மோதி விபத்து

மணப்பாறையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வடசேரி பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


