News March 27, 2024
திருச்சி வேட்பு மனு தாக்கல் அறை மூடல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுக, அமமுக,மதிமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேட்பாளர்கள் இன்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் இதற்கான நேரம் முடிந்த நிலையில் திருச்சிராப்பள்ளி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் அறை மூடப்பட்டது.
Similar News
News October 17, 2025
திருச்சி: ஐஐஎம்-இல் வேலை வாய்ப்பு

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதாவது பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
News October 17, 2025
திருச்சி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !
News October 17, 2025
திருச்சி: குறைந்த கட்டணத்தில் தையல் பயிற்சி

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணத்தில் ஒரு மாத காலம் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த பயிற்சியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் பல்கலைக்கழகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98427 73237 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.