News April 25, 2025
திருச்சி விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

விழுப்புரம் – ராமேஸ்வரம் அதிவிரைவு சிறப்பு ரயில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் மே.2ஆம் தேதி முதல் ஜூன்.30 வரை திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. இன்று (ஏப்.25) முதல் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
திருச்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

திருச்சி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News January 9, 2026
திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 9, 2026
திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..


