News August 18, 2024
திருச்சி விமான நிலைய முனையத்திலிருந்து மக்களுக்கு பஸ் வசதி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் சார்பில் நாளை (ஆக.19) முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை நாளை காலை 8 மணி அளவில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். இதையொட்டி சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
Similar News
News November 28, 2025
திருச்சி: 23.13 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.27) மாலை நிலவரப்படி 23,13,892 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18,02,100 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி: டிட்வா புயல் எச்சரிக்கை – கலெக்டர்

‘டிட்வா’ புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் 154 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழை தொடர்பான புகார்களை 1077 என்ற எண் அல்லது 0431-2418995 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி: வெளுத்து வாங்க போகும் மழை..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


