News April 25, 2025
திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
லஞ்சம் பெற்ற வழக்கில் விஏஓக்கு 2 ஆண்டு சிறை

திருச்சி, நவல்பட்டு அடுத்த குண்டூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த அகமது சுலைமான் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு பணியில் இருந்த போது சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில் இன்று நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட விஏஓ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
News December 19, 2025
திருச்சி: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
திருச்சி: ரூ.6.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் 5.1 ஒரு ஏக்கரில், ₹.6.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


