News April 10, 2025
திருச்சி வழியாக விடுமுறை கால ரயில் சேவை அறிவிப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் – போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் திருச்சி வழியாக ஏப்ரல்-11, 18, 25 மற்றும் மே-2 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூர் சென்றடையும். இந்தக் கோடை விடுமுறை சிறப்பு ரயிலை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சி தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
திருச்சி: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

திருச்சி மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News December 4, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை: உலகளவில் சாதனை!

உலக அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில், மணப்பாறை கல்பாளையத்தான் பட்டியை சேர்ந்த டிக்சன் ராஜ் மற்றும் கே.பெரியப்பட்டியை சேர்ந்த திலீப் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி கோப்பைகளுடன் நேற்று இரவு ஊர் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்ப்படித்தனர்.
News December 4, 2025
திருச்சி: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரயிலில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஒரு அறிவிப்பை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “ரயிலில் கற்பூரம் ஏற்றுதல் அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான அமைதியான யாத்திரைக்காக ஒத்துழையுங்கள். உங்கள் ஒத்துழைப்பே அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


