News March 29, 2025

திருச்சி: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News January 1, 2026

நாளை திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்

image

மதிமுக சார்பில் சமத்துவ நடை பயணம் திருச்சியில் நாளை (ஜன.2) தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

திருச்சி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சியின் முக்கிய நுழைவாயிலான அரியமங்கலம்-பால்பண்ணை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை குறைக்கும் விதமாக இன்று முதல் திருச்சி கலைஞர் பேருந்து நிலையம்-தஞ்சாவூர் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பால்பண்ணை சந்திப்பு வழியாக வராமல், துவாக்குடி-பஞ்சப்பூர் ரிங் ரோடு வழியாக செல்ல வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

திருச்சி மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

திருச்சி மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. 2025-ம் ஆண்டில் திருச்சிக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

error: Content is protected !!