News August 16, 2024

திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

இருகூர்-கோவை வடக்கு ரயில்வே நிலையத்திற்கு இடையே, தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கரூர் வழியாக திருச்சி-பாலக்காடு ரயில் (எண்-16843) நாளை முதல் 10 நாட்களுக்கு மட்டும் இருகூர் – போத்தனுார் வழியாக இயக்கப்படும். இதனால், மேற்கண்ட தேதிகளில் சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

திருச்சி: பேங்க் வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

திருச்சி: JAISAKTHI BAJAJ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி அமைந்துள்ள பிரபல நிறுவனமான JAISAKTHI BAJAJ-யில் காலியாக உள்ள SALES EXECUTIVE / TECHNICAL / SERVICE ADVISOR / SPARES ASSISTANT / TELECALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 15, 2025

திருச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!