News February 16, 2025
திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

திருச்சி ரயில்வே டி ஆர் எம் நிர்வாக அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் உறவினர்களை ஏற்றி விட வருகை தரும்போது பிளாட்பாரத்திற்குள் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் நபர் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது. டிக்கெட் இல்லாத பட்சத்தில் ரயில்வே சட்டப்படி ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Similar News
News November 23, 2025
திருச்சி: சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் பாறைப்பட்டி குவாரிக்கு ஜல்லி ஏற்றச் சென்ற லாரி புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டி பிரிவு ரோடு புதுக்குளம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநர் செல்லப்பன்-ஐ மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 23, 2025
ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.