News September 28, 2025

திருச்சி: ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

ஸ்ரீ கங்கா நகர் – திருச்சிராப்பள்ளி விரைவு ரயிலில் கூடுதல் ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீ கங்கா நகர் – திருச்சிராப்பள்ளி ஹம்ஸஃபர் விரைவு ரயிலில் தற்காலிகமாக ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்.6 முதல் 27 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

போதைப் பழக்கத்திற்கு இளைய தலைமுறை அடிமையாகிவரும் நிலையில், “வாழ்க்கை விலைமதிப்பற்றது போதைக்கு அதை கொடுக்கவேண்டாம்” என திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100 அழைக்க அறிவுறுத்தி உள்ளனர்.

News December 8, 2025

திருச்சி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

image

திருச்சி மெயின் கார்டு கேட், கம்பரசம்பேட்டை, சிறுகனூர், சிறுகமணி, மணிகண்டம் என மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருச்சி காவேரி பாலம், தேவநத்தம், அண்ணா சிலை, நாச்சியார்பாளையம், மணியங்குறிச்சி, கொடியாலம், அந்தநல்லூர் பெட்டவாய்த்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.9) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!