News April 30, 2025

திருச்சி மைய நூலகத்தில் கவிதை ஒப்புவித்தல் போட்டி

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்த நாளையொட்டி, மைய நூலகத்தில் மே 4ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “பாரதிதாசனின் கவிதை ஒப்புவித்தல் போட்டி” நடக்கிறது. இதில் 6 – 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 பணப்பரிசு, பாரதிதாசன் கவிதை நூல் பரிசாக வழங்கப்படும்.

Similar News

News November 24, 2025

திருச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடு

image

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு, நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதம் ஏற்படாத நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு வீடிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 24, 2025

காலி பாட்டிலுக்கு ரூ.10: திருச்சியில் புதிய திட்டம் அமல்

image

திருச்சி மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் வரும் நவ.25-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். இதற்கு டாஸ்மாக் மது பாட்டில்ககளை வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, காலி மதுபாட்டில்களை மீண்டும் அதே மதுபானக் கடையில் ஒப்படைத்தால், வாடிக்கையாளருக்கு ரூ.10 மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

திருச்சி: மின் நிறுத்தம் வாபஸ் – கனமழை எதிரொலி

image

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தியாகேசர் ஆலை, விடத்திலாம்பட்டி, பன்னாங்கொம்பு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட 81 கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மழைகாரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படாது என மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!