News April 28, 2025
திருச்சி மாவட்ட காவல் உதவி எண்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகள், குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்னை, சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவிக்க 8939146100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 24, 2025
திருச்சி: ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்பிலான மெத்த பைட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 24, 2025
திருச்சிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று(நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன
News November 24, 2025
திருச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு, நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதம் ஏற்படாத நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பார்வையிட்டு வீடிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


