News December 4, 2024
திருச்சி மாவட்ட எஸ்பி முக்கிய தகவல்

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
திருச்சி: தனியார் பஸ் மோதி பரிதாப பலி

லால்குடி பெருவெள்ளநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (54). இவர் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னார்புரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அவ்வழியாக வந்த தனியார் பஸ் சங்கர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பஸ் டிரைவர் உதயகுமார் (30) மீது வழக்கு பதிந்த போலீசார், பேருந்தை பறிமுதல் செய்தனர்.
News December 10, 2025
திருச்சி: கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.