News April 23, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட திட்ட அலகில் முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டத்தின் கீழ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான ஒரு காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை மே.15-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT
Similar News
News November 28, 2025
திருச்சி: டிட்வா புயல் எச்சரிக்கை – கலெக்டர்

‘டிட்வா’ புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் 154 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழை தொடர்பான புகார்களை 1077 என்ற எண் அல்லது 0431-2418995 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி: வெளுத்து வாங்க போகும் மழை..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
திருச்சி: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், முதுநிலை திட்ட உதவியாளர் பதவிக்கான காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் வரும் 12.12.2025 க்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


