News September 15, 2024
திருச்சி மாவட்டம் ‘ஹாட்ரிக்’ சாதனை

திருச்சி மாவட்டம் கொடிநாள் நிதி வசூலிப்பதில் மாநில அளவில் தொடர்ந்து 3ஆம் முறையாக 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கொடிநாள் நிதி வசூலுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் பிரதீப் குமார் பொறுப்பேற்ற ஆண்டில் மட்டும் ரூ.2.65 கோடி வசூல் செய்ததற்கு ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News October 16, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST- 40, OBC-38)
6 .ஆரம்ப தேதி: 21.10.2025
7. கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பனைமரம் வெட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். அதில், “தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பனைமரம் வெட்ட நேரிட்டால் அதற்கு மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். உரிய அனுமதி பெற்ற பின்னரே மரங்களை வெட்ட வேண்டும். மரங்களை வெட்டி எடுத்து செல்லும் போது தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை காண்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
திருச்சி: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

திருச்சி மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த திருமேணியம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மூதாட்டியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஆரோக்கியசாமி என்பவர், தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து, நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமியை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.