News April 14, 2025
திருச்சி மாவட்டத்தில் 68.3 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 68.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
திருச்சி: ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்று (ஜூலை.07) இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 8, 2025
திருச்சி: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

திருச்சி மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
திருச்சி விமான நிலையம் முதலிடம்

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.