News April 14, 2025
திருச்சி மாவட்டத்தில் 68.3 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 68.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
திருச்சி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News January 1, 2026
திருச்சி: தேள் கடித்து சிறுவன் பலி

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News January 1, 2026
திருச்சி: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


