News April 16, 2025

திருச்சி மாவட்டத்தில் ரூ.25000 சம்பளத்தில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Field Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News September 18, 2025

திருச்சி: கோளரங்கத்தில் கேளிக்கை கூடம் தொடக்கம்

image

திருச்சி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பொருத்தப்படும் 30 வித கேளிக்கை உபகரணங்கள் மூலம் அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதன் பணிகள் விரைவில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

திருச்சி: ரயில் பயணி தவறவிட்ட செல்போன் மீட்பு

image

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட செல்போனை ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு, உரிய அடையாளங்களை கேட்டறிந்து பயணியிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

News September 18, 2025

திருச்சியில் பதிவான மழை அளவு

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டிதீர்த்தது. அதேநேரம், திருச்சியில் அதிகபட்சமாக மணப்பாறை பொன்னனியார் அணைக்கட்டு பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது, ஏர்போர்ட் பகுதியில் 21 .2 மிமீ மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 316.2 மிமீ மழையும், சராசரியாக 13. 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

error: Content is protected !!