News April 29, 2025
திருச்சி மாவட்டத்தில் மதுபான கடைகள் அடைப்பு

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே.1ஆம் தேதி உலர் நாளாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும் FL2, FL3, FL3A, FL3AA, & FL11 ஆகிய ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அன்று மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
திருச்சி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
திருச்சி: கொத்தனார் மர்ம சாவு

கரூா் சா்ச் காா்னா் நீலிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பி.ராமசாமி (43). திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் குழுமணி பகுதியில் காலனியில் மா்மமான முறையில் இறந்துகிடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி அவர் கொலை செய்யப்பட்டாரா? உட்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
ஶ்ரீரங்கம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை என்னும் பணி நேற்று (நவ.11) காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 78 லட்சத்து 2 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கப்பணம், 58 கிராம் தங்கம், 994 கிராம் வெள்ளி மற்றும் 301 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


