News August 11, 2024
திருச்சி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
Similar News
News April 24, 2025
திருச்சியில் ஏப்.28, பி.எஃப் குறைதீர் கூட்டம்

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத பி.எஃப் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பி.எஃப் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என பி.எஃப் கமிஷனர் ஆசிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே SHARE பண்ணுங்க!
News April 24, 2025
அஞ்சலி செலுத்த வாடிகன் புறப்பட்ட திருச்சி எம்எல்ஏ

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் விமான மூலம் இன்று வாடிகன் புறப்பட்டார். அவரோடு அமைச்சர் ஆவடி நாசார் மற்றும் மத போதகர்கள் வாடிகன் செல்கின்றனர்.