News June 14, 2024
திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 29, 2025
திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
திருச்சியில் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
சத்துணவு மையங்களில் வேலை: கடைசி வாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர் பணிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <