News August 19, 2024
திருச்சி மாநகராட்சி யுடன் இணைக்க எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
Similar News
News April 25, 2025
திருச்சி: டிகிரி முடித்தவர்க்ளுக்கு வேலை?

தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 24, 2025
திருச்சியில் ஏப்.28, பி.எஃப் குறைதீர் கூட்டம்

திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத பி.எஃப் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பி.எஃப் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என பி.எஃப் கமிஷனர் ஆசிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே SHARE பண்ணுங்க!