News March 28, 2025
திருச்சி மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 102.2 – 105.8 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 6, 2025
திருச்சியில் சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட தலைமை நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோட்டைக்காரன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டில் தோட்ட வேலைக்கு வந்த கரூரைச் சேர்ந்த பாபு என்பவர், மைதிலி மற்றும் அவரது கணவர் சம்பத் ஆகியோரை கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் டூவீலரை திருடி சென்றுள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


