News February 18, 2025

திருச்சி புதிய டைடல் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

image

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Similar News

News December 17, 2025

திருச்சி: ரயில் மோதி சம்பவ இடத்திலேய பலி

image

திருச்சி பொன்மலை மற்றும் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2025

திருச்சி: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, கங்கைகாவேரி, அய்யம்பாளையம், மாதவன் சாலை, கவி பாரதி நகர், தேவராய நகர், ஓலையூர், மாம்பழச்சாலை, உத்தமர்சீலி, சென்னை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!