News June 26, 2024

திருச்சி: நீதிமன்ற வளாகத்தில் பூமி பூஜை

image

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சலாம் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

திருச்சி: ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

image

பேங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக நேற்று (ஜூலை.07) இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 8, 2025

திருச்சி: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

திருச்சி மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <>www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் வாயிலாக ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளமாக வழங்கப்படும். இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 8, 2025

திருச்சி விமான நிலையம் முதலிடம்

image

சர்வதேச விமான நிலைய கவுன்சிலிங்கான ஏசிஐ, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், இந்தியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அடங்கியுள்ள பசிபிக் பகுதிகளில் திருச்சி விமான நிலையம் 4.94 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் 54-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.

error: Content is protected !!