News June 26, 2024
திருச்சி: நீதிமன்ற வளாகத்தில் பூமி பூஜை

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சலாம் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 7, 2026
திருவெறும்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து பரணிக்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மக்கள் செல்ல தடை – திருச்சி கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.