News April 8, 2025
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.11) இலவச நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளர்ப்பு உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும் என மைய தலைவர் ஷிபாதாமஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 2025-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற டிச.1ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.2102 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இத்தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
திருச்சி: இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 5360 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை நகலுடன் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
பஞ்சப்பூர்: புதிய பாலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ.800 முதல் ₹.900 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.


