News April 12, 2025

திருச்சி: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News October 26, 2025

திருச்சி: லஞ்ச வழக்கில் 2 ஆண்டுகள் சிறை

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க ரூ.2500 லஞ்சம் பெற்ற, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.1000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதியரசர் புவியரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 26, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

தொட்டியம் அடுத்த சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் (39) என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 22-ம் தேதி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News October 26, 2025

திருச்சி அருகே டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது

image

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் நேற்று (அக்.24) அவரது 50 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை சிந்தாமணி அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவரது டூவீலரை 14 வயதுடைய சிறுவன் திருடி சென்றதை கண்டறிந்தார். மேலும், இதேபோல, விஜயலட்சுமி என்பவரின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரையும் 14 வயதுடைய சிறுவன் திருடியதை கண்டறிந்தார். இதுகுறித்த புகாரில் கோட்டை போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.

error: Content is protected !!