News April 22, 2025
திருச்சி – தாம்பரம் இடையே 5 நாள் கோடை கால சிறப்பு ரயில்

திருச்சி – தாம்பரம் இடையே, கோடை கால சிறப்பு ரயில், தஞ்சாவூர் , பாபநாசம் , கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் வழியாக 29.04.2025 முதல் 29.06.2025 வரை செவ்வாய் , புதன் , வெள்ளி , சனி , ஞாயிறு என வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது. முன்னதாக, இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கியது. விரைவில் முன் பதிவு தொடங்க உள்ளது.
Similar News
News September 18, 2025
திருச்சி: கோளரங்கத்தில் கேளிக்கை கூடம் தொடக்கம்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பொருத்தப்படும் 30 வித கேளிக்கை உபகரணங்கள் மூலம் அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதன் பணிகள் விரைவில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருச்சி: ரயில் பயணி தவறவிட்ட செல்போன் மீட்பு

ரயில்வே பாதுகாப்பு படையினர் “ஆபரேஷன் அமானத்” என்ற முன்னெடுப்பின் கீழ், ரயில் பயணிகள் தவறவிடும் பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட செல்போனை ஆர்.பி.எப் காவலர்கள் மீட்டு, உரிய அடையாளங்களை கேட்டறிந்து பயணியிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயில் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
News September 18, 2025
திருச்சியில் பதிவான மழை அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டிதீர்த்தது. அதேநேரம், திருச்சியில் அதிகபட்சமாக மணப்பாறை பொன்னனியார் அணைக்கட்டு பகுதியில் 44.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது, ஏர்போர்ட் பகுதியில் 21 .2 மிமீ மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 316.2 மிமீ மழையும், சராசரியாக 13. 18 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது