News October 4, 2024
திருச்சி டைடல் பார்க் கட்டுமானத்திற்கு டெண்டர்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடி மதிப்பில், 5.58 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள இந்த டைடல் பார்க்கை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு. மேலும் இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யவும்
Similar News
News April 29, 2025
திருச்சி: பெண்களுக்கான இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான 30 நாள் இலவச எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. குறைந்தது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-40 வயதுடைய பெண்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் மூலம் மாதம் ரூ.15,000 வருமான கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 02/05/25 ஆகும். தொடர்புக்கு: 8903363396.
News April 29, 2025
திருச்சி: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

திருச்சி மாவட்ட மக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்: திருச்சி எஸ்.பி- 0431-2333603, திருச்சி போலீஸ் கமிஷனர்- 0431-2332566, முசிறி டி.எஸ்.பி- 9498162695, மணப்பாறை டி.எஸ்.பி – 9443659745, லால்குடி டி.எஸ்.பி – 9498160648, திருவெறும்பூர் டி.எஸ்.பி- 9866246303, மாவட்ட குற்றப் பிரிவு- 9498178817, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு- 9498167714. மறக்காம SHARE செய்யவும்
News April 29, 2025
சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அறிவுரை

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுவெளி மற்றும் சாலை போன்றவை தெரியும்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியுள்ளது.