News April 20, 2025
திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!
Similar News
News December 23, 2025
திருச்சி காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் பண்டிகை அல்லது தொடர் விடுமுறை தினங்களில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும்
காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்வோரின் வீடுகள் Locked House பட்டியலில் சேர்க்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து காவலர்களால் கண்காணிக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
News December 22, 2025
உறையூர்: மகா மாரியம்மன் கரக உற்சவ திருவிழா

உறையூர் வண்டிக்கார தெரு பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் 100-வது ஆண்டு கரக உற்சவ திருவிழா வரும் டிச.,30-ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் டிச.,31 அன்று மாலை 4 மணி அளவில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருச்சி மக்களே கடன் தொல்லையா? இத பண்ணுங்க

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும், ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது தனி சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


