News May 7, 2025
திருச்சி சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் விபத்தில் மரணம்

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பூமாலை (53). இவர் கடந்த ஏப்.29 தனது டூவீலரில் துறையூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பூமாலை டூவீலர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பூமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 5, 2025
திருச்சி: ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்படும், திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வரும் டிச.7, 14 ஆகிய தேதிகளில் மட்டும் வழக்கமான வழித்தடமான செங்கல்பட்டு, தாம்பரம், எக்மோர் ரயில் நிலையங்களை தவிர்த்து வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஜங்ஷன், மேல்பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 5, 2025
திருச்சி: கார் மோதி ஆசிரியை பலி; டிரைவருக்கு சிறை

இனாம் சமயபுரம் புதூரை சேர்ந்தவர் தனலட்சுமி (60). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் கடந்த 2013-ம் ஆண்டு நெ.1 டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த போது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கின் விசாரணை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் கார் ஓட்டுநர் கஸ்பர் ரெட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜய்ராஜேஷ் தீர்ப்பளித்தார்.
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.


