News March 27, 2025
திருச்சி: சகல தோஷமும் நீங்க அருளும் மும்மூர்த்திகள்

மண்ணச்சநல்லூர் உத்தமர் கோயிலுக்கு சென்று வழிபட்டால், கல்வி, ஞானம் மற்றும் செல்வம் பெருகும் என்றும், மும்மூர்த்திகளும் தேவியர்களோடு அருள்வதால் இங்கு வழிபட்டால் குடும்ப ஒற்றுமை மேலோங்கி சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருவதே இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இதனை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
Similar News
News July 6, 2025
திருச்சி: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சில உரக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மானிய உரங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்ததில், 4 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
திருச்சி: முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு, சமூக நலன் மற்றும் சட்ட உதவி செய்வதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் முன்னாள் படைவீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இங்கு <