News March 18, 2024

திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு.!

image

திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.

Similar News

News July 11, 2025

வேலைவாய்ப்பு மோசடி : திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுரை

image

வேலைவாய்ப்பு மோசடிகளிலிருந்து எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மோசடியில் ஈடுபடுவோர் பொதுவாக அதிக சம்பளம், பணிநியமனம் ஆகியவற்றிற்கு உறுதியளிக்கின்றனர். வேலைக்கு விண்ணப்பிக்க அல்லது நேர்காணலுக்கு சட்டபூர்வ நிறுவனங்கள் பணம் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். வேலை மோசடிகள் குறித்த புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம். SHARE NOW

News July 11, 2025

மணப்பாறை: கார் ஏறி இறங்கி கூலி தொழிலாளி பலி

image

மணப்பாறை எடத்தெரு பகுதியில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பழைய காலனியைச் சேர்ந்த பெயிண்டர் முருகேசன் என்பவர் மீது கார் ஏறி இறங்கியது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அழகிரிசாமி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 10, 2025

திருச்சி மாநகர காவல் இரவு பணி விவரங்கள்

image

திருச்சி மாநகர காவல் (10.07.2025) இரவு பணி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையராக யாஷ்மின் பானு பணியாற்றுகிறார். முக்கிய காவல் நிலையங்களில் சிவபிரகாசம் (பொன்மலை), திருமதி. சரஸ்வதி (கே.கே.நகர்), திரு. கோசலைராமன் (ஸ்ரீரங்கம்), திருமதி. ரத்தத்தின் (காந்தி மார்க்கெட்), திரு. பாலகிருஷ்ணன் (பாலக்கரை), திரு. சண்முகவேல் (உறையூர்) ஆகியோர் காவல் ஆய்வாளர்களாக பணியில் உள்ளனர்.

error: Content is protected !!