News March 27, 2025
திருச்சி: குளிர்பானம் விநியோகிக்கும் ரோபோ

திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தேவையான சஹர் உணவுகள், நோன்பு கஞ்சி, பழங்கள் மற்றும் குளிர் பானங்களை விநியோகிக்கும் விதமாக திருச்சியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் தலைமையிலான ரோபாட்டிக்ஸ் வடிவமைப்பாளர் குழுவினரால் உருவாக்கப்பட்ட நவீன ரோபோ மூலமாக குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. SHARE NOW!
Similar News
News December 12, 2025
திருச்சி: 12 பேர் கைது – தனிப்படை அதிரடி

மணப்பாறை அடுத்த குமரபட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டதில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணியானது வரும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு முகாம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு முகாமானது வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.