News April 29, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News November 11, 2025

திருச்சி: குடிநீர் விநியோகம் ரத்து

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், அண்ணா நகர், காஜா பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், திருவெறும்பூர், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.12) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், நாளை மறுதினம் (நவ.13) வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

திருச்சி: சபரிமலைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் ஹாசுர் சாகிப் நந்தட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 20,27, டிச.4,11,18,25, ஜன.1,8,15 ஆகிய தேதிகளில் (வியாழன் மட்டும்) திருச்சி வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழன் காலை 10 மணிக்கு நந்தட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொல்லம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!