News August 8, 2024
திருச்சி எம்எல்ஏவின் நெகிழ்ச்சி செயல்

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது மாதச் சம்பளம் முழுவதையும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு வழங்கினார். மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் படிப்புக்கு தேவையான முழு கட்டண தொகையையும் நேற்று வழங்கினார். இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும்
Similar News
News January 11, 2026
திருச்சி: பொங்கல் பரிசால் பறிபோன உயிர்

கருங்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அருள் ஜெனிபர். பழ வியாபாரியான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் நேற்று தகராறு ஏற்பட்டடுள்ளது. இதில் மனமுடைந்த அருள் ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 11, 2026
திருச்சி: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை மேலும் விரைந்து முடித்திட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே கிராமப்புறங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் விருப்பமுள்ள ஆண், பெண் தன்னார்வலர்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.