News April 14, 2024
திருச்சி: உளவுத்துறை காவலர் பலி

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி சிபிசிஐடி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது. இதனால், இன்று காலை சிமெண்ட் பூச்சிக்கு தண்ணீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News July 11, 2025
மணப்பாறை: கார் ஏறி இறங்கி கூலி தொழிலாளி பலி

மணப்பாறை எடத்தெரு பகுதியில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பழைய காலனியைச் சேர்ந்த பெயிண்டர் முருகேசன் என்பவர் மீது கார் ஏறி இறங்கியது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அழகிரிசாமி தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News July 10, 2025
திருச்சி மாநகர காவல் இரவு பணி விவரங்கள்

திருச்சி மாநகர காவல் (10.07.2025) இரவு பணி, கண்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையராக யாஷ்மின் பானு பணியாற்றுகிறார். முக்கிய காவல் நிலையங்களில் சிவபிரகாசம் (பொன்மலை), திருமதி. சரஸ்வதி (கே.கே.நகர்), திரு. கோசலைராமன் (ஸ்ரீரங்கம்), திருமதி. ரத்தத்தின் (காந்தி மார்க்கெட்), திரு. பாலகிருஷ்ணன் (பாலக்கரை), திரு. சண்முகவேல் (உறையூர்) ஆகியோர் காவல் ஆய்வாளர்களாக பணியில் உள்ளனர்.
News July 10, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW