News April 14, 2024
திருச்சி: உளவுத்துறை காவலர் பலி

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி சிபிசிஐடி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது. இதனால், இன்று காலை சிமெண்ட் பூச்சிக்கு தண்ணீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News October 22, 2025
திருச்சி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!
News October 22, 2025
திருச்சி: அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு திரும்ப பொதுமக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதியினை, போக்குவரத்துறை அமைச்சர் ச.சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார்.
News October 21, 2025
திருச்சி: ரயில்வே கோட்ட மேலாளர் அறிவிப்பு

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி கோட்டத்தில் அக்.1ம் தேதி முதல் இன்று வரை 116 ரயில் இயக்கப்பட்டு, மொத்தம் 21,68,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பிரிவில் 16,63,296 பயணிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவில் 5,05,099 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக’’ தெரிவித்தார் அவர்.