News August 9, 2024
திருச்சி ஆட்சியரின் உடனடி நடவடிக்கை

ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.
Similar News
News November 11, 2025
திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்- I வரும் 15 ஆம் தேதி 14 தேர்வு மையங்களிலும், தாள் – II வரும் 16 ஆம் தேதி 51 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. இதில், தாள் I – 3946 பேரும், தாள் II – 15,286 பேரும் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்கள் பறக்கும் படையினர் மூலம் கண்காணிக்கப்படும். நுழைவு சீட்டு மற்றும் விவரங்களுக்கு 18004256753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
திருச்சியில் காலை கொலை; நண்பகல் குற்றவாளிகள் கைது

திருச்சி, பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் தாமரைச்செல்வன் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்டோரை சில மணி நேரங்களில் திருச்சி மாநகர போலீசார் அதிரடியாக விரட்டிச் சென்று கைது செய்தனர்.
News November 10, 2025
திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான எழும்பூர், தாம்பரம் வழியை தவிர்த்து ரேணிகுண்டா, திருத்தணி வழியாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


