News March 28, 2025
திருச்சி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

திருச்சியை சுற்றியுள்ள கல்லூரிகளின் பட்டியல்: ▶தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்சி) ▶ஏ.ஏ. அரசு கலைக் கல்லூரி (முசிறி) ▶டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி (குளித்தலை) ▶அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர், இனாம்குளத்தூர்) 12ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் இந்த கல்லூரிகளின் பட்டியலை பயன்படுத்தி கொள்வதோடு உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 18, 2025
திருச்சி: புத்தக பதிப்பாளர்களுக்கு அழைப்பு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய உள்ள காமராஜர் நூலகத்திற்கு புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை நூலகத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 26-ம் தேதிக்குள் அதே இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என பொது நூலக இயக்குனர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்சி: சிறப்பு குறைதீர் முகாம் அறிவிப்பு

திருச்சி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை பிரதீப்குமார், உதவி இயக்குனர் (காப்பீடு மற்றும் புகார்), அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி -01 என்ற முகவரிக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்சி: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


