News March 21, 2024

திருச்சி அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

Similar News

News October 14, 2025

திருச்சி: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

திருச்சி: 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

image

சோமரசம்பேட்டையை சேர்ந்த சங்கர்-மனோன்மணி (30) தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோன்மணி நேற்று தனது தாயார் ரோகிணிக்கு போன் செய்து தன் மாமனார், மாமியார் இருவரும் பிரச்சனையில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து ரோகிணி தனது மகளை காண சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக சங்கர் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 14, 2025

திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!