News August 16, 2024
திருச்சியை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.கேரளாவில் உயிரிழப்பு

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜ்மோகன் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது ராஜ்மோகனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்சி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 1, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், திருச்சி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல்-II, மக்காச்சோளம்-II, பருத்தி-II ஆகிய பயிர்களுக்கு நவ.15 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடைசி தேதி வரை காத்திராமல் விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 1, 2025
திருச்சி: போதை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் (22), ஜாகிர் உசேன் (22), ரியாஸ் அகமது (26), முகமது அப்துல்லா (28), சந்தோஷ்(19 ) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


