News June 14, 2024

திருச்சியை சுற்றி 45 ஆயிரம் கிலோ தூசி நீக்கம்.!

image

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 45,895 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டுள்ளது என்றும், அதனைத்தொடர்ந்து, 31 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ அபிஷேகபுரம் பகுதிகளில் மொத்தம் 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

Similar News

News April 29, 2025

திருச்சி – காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

image

திருச்சி கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பராமரிப்புப் பணி காரணமாக திருச்சி-காரைக்கால் டெமு (76820) ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி-தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். காரைக்கால்-திருச்சி (76819) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே ரத்து செய்யப்படும்; தஞ்சாவூர்-திருச்சி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 29, 2025

திருச்சியில் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

image

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

சத்துணவு மையங்களில் வேலை: கடைசி வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 231 சமையல் உதவியாளர் பணிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்து <<>>தெரிந்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை (ஏப்.30) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!