News June 27, 2024

திருச்சியில் 56 கடைகளுக்கு சீல்!

image

திருச்சி மாவட்டத்த்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பெருட்கள் விற்பனை செய்த 56 கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.16.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

திருச்சி: கார் மோதி துடிதுடித்து பலி

image

வையம்பட்டி அடுத்த காந்திநகர் அருகே நேற்று இரவு சபரிமலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடந்த சென்ற பாலசுப்பிரமணி என்பவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வையம்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

image

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்குறிப்பிட்ட தேதிகளில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 489 மனுக்களுக்கு தீர்வு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான மணிக்குள், வேலைவாய்ப்பு கோரிக்கை என 489 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!