News December 4, 2024

திருச்சியில் 500 பேர் கைது

image

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் இன்று வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் வங்கதேச இந்துக்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Similar News

News October 24, 2025

திருச்சி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK செய்க<<>>.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

திருச்சி: இளைஞர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.12.2025 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்து இருக்க வேண்டும். தகுதி உடைய நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 24, 2025

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் அக்.,26-ம் தேதி காலை 10:30 – 12:30 மணி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான “பேசும் சித்திரம்” என்ற தலைப்பில் “ஓவியப்பயிற்சி” நடைபெற உள்ளது. வாசகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!